Ad Widget

சிவகரன்,அனந்தி ஆகியோரது உறுப்புரிமை பறிப்பு!

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

sivakran-ananthy

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த இருவரதும் பதவிகள் பறிக்கப்படுவதுடன் அவர்கள் இருவரையும் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில் வைத்திருப்பதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

Related Posts