உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளால் எயிட்ஸ் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று ,இடம்பெற்றது.
உலக எயிட்ஸ் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் எயிட்ஸ் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று சிறைச்சாலை கைதிகளால் நேற்று காலை இடம்பெற்றது.
அதன்படி துரையப்பா விளையாட்டு மைதான முன்றலில் இருந்து ஆரம்பித்து வைத்தியசாலை வீதி வழியாக சென்று சிறைச்சாலையை அடைந்தனர்.
ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.