Ad Widget

சிறுவர்,பெண்கள் வன்முறையை கண்டித்து யாழில் மாபெரும் பேரணி

எமது சமூகத்தில் சிறுவர் மற்றும் பெண்களின் துஸ்பிரயோகங்கள் தேவையற்றது என்ற தொனிப் பொருளில் யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,தேசிய பெண்கள் சம்மேளனம்,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,யாழ்.கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து சிறுவர்,பெண்கள் வன்முறையை கண்டித்து இன்று யாழ்.நகரில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது.

குறித்த பேரணி யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பமாகி யாழ்.மாவட்ட செயலகத்தில் முடிவடைந்தது.

மேலும் “அரசினதும்,காவல்துறையினதும் அசமந்தப் போக்கே குற்றங்கள்அதிகரித்துச் செல்ல காரணம்?,விசாரணை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்காதே!,குற்றங்களை கட்டுப்படுத்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!,குற்றச் செயல்கள் அதிகரிப்பதன் மர்மந்தான் என்ன?சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்,சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி குறித்த பேரணி இடம்பெற்றது.

மேலும் பேரணி நிறைவில் காணியின் மேலதிக அரச அதிபர் முரளிதரனிடம் குறித்த அமைப்புக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Related Posts