சிறிதரன், பசுபதிப்பிள்ளை பொலிஸாரால் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

sritharan_army_003

நேற்றுக்காலை கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய வேரவில், கிராஞ்சி ஆகிய பகுதிகளுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும், மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையும் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போதே பொலிஸார் இவர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்களிருவரிடமும் சுமார் 6 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினருடன் சென்ற இந்தியப் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையை இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக ஜெயபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.