2005ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு உச்ச நீதிமன்றம் 17.06.2013 அன்று தீர்ப்பளித்தது.
2012ம் ஆண்டு வட்டுக்கோட்டை காசி விஸ்வநாத ஆலய உரிமையாளர் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட சிந்துபுரம் பெயர்ப்பாவனைக் கெதிரான வழக்கின் போது மனுதாரர்களால் விடுதலைப் புலிகளால் மாவீரர் நினைவாக நிறுவப்பட்ட பெயர்ப்பலகையை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரச நிரவாகத்தினால் பல்வேறு மாவீரர் நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில், தம் குடும்ப நலனுக்காக மாவீரர் நினைவுச் சின்னத்தை அகற்ற கோரிய ஆலய உரிமையாளர் குடும்பத்திற்கெதிராக கிராம மக்கள் விசனமடைந்துள்ளதைக் காண முடிகின்றது.