Ad Widget

சிதம்பரநாதன் சுரேந்தினி இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தெரிவு

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணான சிதம்பரநாதன் சுரேந்தினி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

surenthene-ne-ball

இவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார்.

இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts