சிங்கக்கொடி ஏற்ற மறுத்த பா.உ விநாயகமூர்த்திக்கு எதிராக விசாரணை

இலங்கையின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசப்பற்று தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியிடம், இலங்கைத் தேசியக் கொடியை ஏற்றுமாறு, சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கேட்டிருந்தார்.

ஆனால், அக்கோரிக்கையை ஏற்க நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி மறுத்து விட்டார்.

மேலும், இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியை, சுமார் 5 நிமிடங்கள் வரை பிலிக்ஸ் பெரேரா நிர்ப்பந்தித்தார். அதற்கு அவர் உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts