சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உதய சூரியன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்ட மக்கள் தமக்கு “சொந்த காணி வேண்டும்”, “50 வருடங்களுக்கு மேலாக நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம்”, “எமக்கு தீர்வு எப்போது?” , “அரச அதிகாரிகளே நீங்கள் வந்து எமது குடியிருப்பை பாருங்கள்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 8.30 மணியில் தொடக்கம் நூற்றுக்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.