சர்வதேச மீனவர்தினத்தை வடக்கில் துக்கதினமாக கடைப்பிடிக்க ஏற்பாடு.

world-fisheries-dayஉலகளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள மீனவர் தினத்தை வட
மாகாகண மீனவர்கள் பகிஷ்கரித்து துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு வடமாகண மீனவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது .

போரால் பாதிப்படைந்துள்ள வடக்கு மீனவர்கள் வாழ்வாதார உதவிகள் கிடைக்காத நிலையில் பாதிப்படைந்துள்ளதுடன் இந்திய தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துவருகின்றனர் .

இவ்விடயம் தொடர்பாக இலங்கை – இந்திய அரசுகளுடன் கதைத்த போதிலும் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை .

இதனைக் கண்டித்தே வடபகுதி மீனவர்கள் உலக மீனவர் நாளைப் பகிஷ்கரித்துள்ளதாக அறிவித்துள்ளனர் .