சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை!

சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மிகவும் நேர்மையான, திறந்த வெளிநாட்டுக் கொள்கையையே பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூகோள செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை என்ற தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புலைமைத்துவ கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக அன்றி நாட்டுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாக, இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும், தான் நாட்டைக் காட்டிக் கொடுத்து, வௌியே உள்ள சக்திகளுக்கு அதனை ஒப்படைப்பதாகவும், வௌியாக செய்திகளையும் ஜனாதிபதி இதன்போது மறுத்துள்ளார்.