Ad Widget

சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் கடிதம்! – விரைவில் சந்திக்கிறார்

தமக்கிடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.

இது தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, வடமாகாண சபை விடயங்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்படவுள்ளன. இந்த சந்திப்பின்போது பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

Related Posts