“சப்ரா ” நிதி நிறுவனம் மூடப்பட்டமை குறித்து விசாரணை

Inquiry1யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் மூடப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்படுத்திய காலத்தில் இந்த நிதி நிறுவனம் இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சப்ரா யூன்கோ என்ற நிதி நிறுவனமே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.1993ம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டது. இன் நிறுவனத்தில் சுமார் அறுபது மில்லியன் ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்தது. இதில் பெருமளவு பணம் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டவர்களின் பணமே.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது கொண்ட அச்சம் காரணமாக நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்த எவரும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை. தற்பொழுது குறித்த நிதி நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: Editor