சனத் ஜெயசூரியா யாழ் விஜயம்

Jeyasooreyaநாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை துடுப்பாட்டச் சம்மேளனத்தின் தெரிவுக் குழுவின் தலைவருமாகிய சனத் ஜெயசூரிய ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.

சனத் ஜெயசூரியவினால் உருவாகப்பட்டு நடாத்தப்பட்டுவரும், ‘சனத் ஜெயசூரிய துடுப்பாட்ட நிறுவகத்தில்’ பயிற்சி பெற்றுவரும் துடுப்பாட்ட வீரர்கள், யாழ். மாவட்ட பாடசாலை அணிகளுடன் சிநேகபூர்வ துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காக நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

யாழ். மாவட்டத்திலுள்ள சென்.பற்றிக்ஸ், யாழ்ப்பாணம் மத்தி, ஸ்கந்தவரோதய, மானிப்பாய் இந்து ஆகிய கல்லூரிகளின் 13, 19 வயதுப் பிரிவு அணிகளுடன் 30 மற்றும் 20 பந்து பரிமாற்றங்கள் கொண்ட போட்டிகளில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சனத் ஜெயசூரிய துடுப்பாட்ட நிறுவக அணி வீரர்கள் விளையாடினர்.

யாழ்ப்பாண வீரர்களின் திறன்களை மதிப்பிடவும், வீரர்களை தமது பயிற்சி நிறுவகத்திற்கும் உள்வாங்குவதற்காகவும் சனத் ஜெயசூரிய ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வீரர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் சனத் ஜெயசூரியவுடன் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துருசிங்க கலந்து கொண்டிருந்தார்.