இந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 84 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜெ.புஷ்பகுமார தெரிவித்தார்.
திட்டமிட்டபடி எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதிவரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.
2015 ஜனவரி மாதத்தில் பாப்பரசரின் இலங்கை வருகையும் ஜனாதிபதித் தேர்தலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், பரீட்சை தினங்களிலும் மாற்றம் வரலாம் என கருதப்பட்டது. இந்நிலையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதுவரை இத்திகதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் திட்டமிட்டபடி டிசெம்பரில் உரிய காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜெ. புஷ்பகுமார மேலும் தெரிவித்தார்.