க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் தென்மராட்சி பிரதேச மாணவர்களுக்கான செயலமர்வு

students-seminarக.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் தென்மராட்சி பிரதேச மாணவர்களுக்கான செயலமர்வு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நேற்று ஆரம்பமானது. வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.

இச்செயலமர்வு 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாட்டின் பலபாகங்களையும் சேர்ந்த வளவாளர்கள் இச்செயலமர்வினை நடாத்துகின்றார்கள். தென்மராட்சி கல்வி வலயத்தினை சேர்ந்த 1000 மாணவர்கள் இச்செயலமர்வில் பங்குபற்றுகின்றார்கள்.

ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், தென்மராட்சி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கிருஸ்ணகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் இவ்வாரம்ப நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.