Ad Widget

கோத்தபாயவைக் கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி அழுத்தம்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் எழுப்பப்பட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்கள் சுயேச்சையாக உருவாக்கிக்கொண்ட அமைப்புதான் தேசிய நிறைவேற்று சபையாகும்.

சங்கைக்குரிய சோபித்த தேரர் உட்பட ஏனைய அமைப்புக்களும் அதில் கலந்துகொண்டன. ஆளுங்கட்சியில் எதிர்கட்சியும் இருந்தது. அதில் நாம் அரசியல் தீர்மான மேற்கொண்டு பாரிய திட்டமொன்றை மேற்கொண்டோம். நாம் பொறுப்பெடுத்தோம். அதற்கு தேசிய நிறைவேற்றுசபை என்றழைத்தோம். என தெரிவித்துள்ளார்.

Related Posts