கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை சந்தித்தார் அங்கஜன்

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேற்று (21-08-2014) மாலை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Angajan-1

வலி. வடக்கில் இருந்து கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த இம்மக்கள் மக்கள் குறித்த நலன்புரி நிலையத்திலையே வசித்து வருகின்றனர். சேறும் சகதிகளுக்கு மத்தியில் வாழும் இம் மக்களின் குடிசைகளுக்கு நேரில் சென்ற வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அம் மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

தாம் கடந்த 23 வருடங்களாக இந்த முகாமில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றமையினையும், இன்னும் சொந்த இடங்களில் குடியமர்த்தாமல் எமது காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது எனவும் அம்மக்கள் வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தனர்.

Angajan-2-koppilapirivu

‘கடந்த வருடம் வந்த சில அதிகாரிகள் எமக்கு வேறு இடத்தில் காணி தரலாம் என கூடிச்சென்று கீரிமலை வீதியில் கல்குவாரிக்கு அருகில் உள்ள காணியை காட்டி அங்கு வந்து குடியேறுமாறு கூறினார்கள். நாம் அக்காணிகளில் குடியேற மாட்டோம் எம்மை எமது சொந்த இடத்தில் தான் குடியமர்த்த வேண்டும்’ என மக்கள் தாம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் வேலையில்லா பிரச்சனை காணப்படுவதாகவும் இதனால் தமது பகுதி மக்கள் கடும் வறுமைக்குள்ளான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனார். மக்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர் வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அந்த மக்களுக்கு தெரிவிக்கையில்,

‘உங்கள் பிரச்சனையை நீங்கள் நினைத்தால் மட்டுமே தீர்க்க முடியும். உங்கள் பிரச்சனையை நீங்கள் கூறினீர்கள் அதற்கு பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்க்கவே நான் இங்கு நேரில் வந்துள்ளேன். உங்களை போலவே நானும் எனது சொந்த நிலமான வலி வடக்கிற்கு செல்ல ஆசைப்படுகின்றேன். அதற்கான நடவடிக்கையாக இராணுவ கட்டளைத்தளபதியுடன் பல சமயங்களில் கலந்துரையாடியுள்ளேன். கலந்துரையாடிய வண்ணமும் உள்ளேன். வெகுவிரைவில் நாம் அப்பகுதிக்கு செல்வோம். எமது சொந்த நிலங்களில் கால் எடுத்து வைப்போம் உங்கள் கனவுகள் நிறைவேற நான் வழி செய்வேன். உங்கள் பிரச்சனைகளை விளங்கிக் கொண்டுள்ளேன் ஏனீெ்னி்ல் அப் பிரச்சனை எனக்கும் உண்டு நீங்கள் உங்கள் சொந்த இடத்தில் மீளவும் குடியமர ஆர்வம் கொண்டுள்ளீர்கள். அதனை நான் முடிந்தவரை முயற்சி செய்து முடிப்பேன் . அதன் மூலம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.

Related Posts