கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான வழக்கொன்றுக்காக தொடர்ந்து ஐந்து தடவை நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காத கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ரத்நாயக்காவுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான இந்த வழக்கில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ரத்நாயக்காவுக்கு நீதிமன்றிற்கு வருகை தருமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதனால், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.விஸ்வநாதன் பிறப்பித்தார்.