கொலை சந்தேகநபருக்கு பிணை மறுப்பு

jail-arrest-crimeகொலை சந்தேக நபர் ஒருவரின் பிணை மனு யாழ். மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பிணை வழங்குவதற்கு மறுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு யூலை மாதம் 05 ஆம் திகதி ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியில் செல்வராசா அனுராஜ் (வயது 26) என்ற இளைஞரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஜெசுராஜா ஜெயராஜ் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட இவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிரான பிணை மனு அவரது மனைவியினால் சட்டத்தரணி ரெமீடியஸ் ஊடாக யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் கொலைக்குற்றச்சாட்டின் விசாரணைகள் முடிவடையாத நிலையில் பிணை மனுவினை வழங்க முடியாது எனக்கூறி பிணை மனுவை நிராகரித்தார்.

Related Posts