கொரோனா உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் – ஆலோசனைப் பெற விசேட இலக்கம்

கொரோனா தொற்று உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சந்தோசமின்மை, அதிகரித்த கோபம், உணவின் மீதான நாட்டமின்மை, நித்திரையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அந்தச் சங்கத்தின் மனநல விசேட வைத்தியர் சஜிவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிகுறிகளானது, நாளடைவில் மன அழுத்தமாக மாறக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், இவ்வாறு மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள், 247 மற்றும் 1926 ஆகிய அவசர இலக்கங்களுடன் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor