கைதான தமிழக மீனவருக்கு எயிட்ஸ்

aids_ribbonஇலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுள் ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று இருப்பது நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 35 வயது டைய மீனவர் ஒருவருக்கே இந்த எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருமணமாகாத இவர், தான் ஏற்கனவே இந்தியாவில் சிகிச்சை பெற்றுவருகின்றேன் எனவும் தனக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் சரியான விவரம் தெரியாது எனவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது தனிமைப்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts