கைக்கூலிகளே சுவரொட்டிகளை ஒட்டினர்;- தமிழரசு கட்சி

notes-sambanthanவவுனியா,கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி மக்களை திசைதிருப்பலாம் என கனவுகாணும் கைக்கூலிகளது வேலையே என தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வவுனியா,கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்டு,தமிழரசுக் கட்சியின் வவுனியா,கிளிநொச்சிக் கிளை என உரிமைகோரப்பட்ட சுவரொட்டிகள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகள் குறித்து தமிழரசுக் கட்சியின் வவுனியா,மற்றும் கிளிநொச்சி மாவட்ட கிளையின் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

இந்த வேலைகளை செய்வது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மாவையை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க முதலில் பலர் விருப்பம் தெரிவித்தனர். அதனால் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு கட்சிகள் அனைத்தும் கூடி இறுதியான முடிவை எட்டின.

இந்த சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்கு நன்குதெரியும்.

ஆனால் இதனை தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்கள் கூட்டமைப்புக்கட்சிகளுக்குள் குழப்பம் என காட்டியும்,நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தியும் அரசியல் செய்ய முற்படுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் நாட்களில் அதிகமாகவே இருக்கும். இது குறித்து மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் என கூட்டமைப்பு கட்சிகள் சார்பாகக் கோருகின்றோம் என்று அந்தப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

சம்பந்தனுக்கு எதிராக சுவரொட்டிகள்

Recommended For You

About the Author: Editor