கேப்பாபிலவில் பெரும் இராணுவக் குடியிருப்பு; 2,000 ஏக்கர் காணியில் 4,000 குடும்பங்களை குடியேற்றத் திட்டம்

ARMY-SriLankaமுல்லைத்தீவு, கேப்பாபிலவில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காக 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்தில், போர் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரால் பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாகக் கேப்பாபிலவில் பொது மக்களின் காணிகள் உட்பட 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதில் ஆயிரத்து 500 ஏக்கர் வரையிலான காணி அரச காணி என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 526 ஏக்கர் காணி தனியாருக்குச் சொந்தமானது.

4 ஆயிரம் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்காகவே மேற்படி காணியைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நில அளவைத் திணைக்களத்தினால் குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதேவேளை வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்காகக் காணிகள் சுவீக ரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.