கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தொடரும் தாக்குதல்!

attack-attackவடமாகணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வடக்கில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையின் நேற்றய தினம் கச்சாய் கடற்கரை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனம்தெரியாத நபர்களினால் திக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று பிற்பகல் 2.30 மணியவில் கச்சாய் பகுதியில் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த போது வாயினை துணியால் கட்டிய நபர்கள் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளனர் எனினும் குறித்த ஆதரவாளர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார் எனினும் அவரை பிந்தொடர்ந்து வருவதை அவதானித்த ஆதரவாளர் மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு அருகிலுள்ள வீட்டுக்குள் சென்றுள்ளார் இதனால் ஆத்திரம் கொண்ட நபர்கள் மோட்டார் சைக்கிளை பெற்றோல் ஊற்றி கொழுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது