கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஊர்காவற்துறையில் தாக்குதல்

Kajatheepan-tnaவட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது ஊர்காவற்துறை பகுதியில் வைத்து கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஆசிரியரான கஜதீபன் அனலைதீவில் தான் கற்பிக்கும் மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்து விட்டு ஊர்காவற்றுறை துறைமுகப் பாதையினூடாகத் திரும்பும் வழியிலே இத்தாக்குதல் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் வாகனத்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்தபோதும், கஜதீபன் காயங்கள் எதுவுமின்றி தப்பினார்.

இத தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.