கூட்டமைப்பின் சார்பில் பெண் வேட்பாளர்கள் மூவர் களத்தில்!

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட தலைமைச்செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர். இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

TNA-canndy-Womens

36 பேரைக்கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும்,03 பெண்களும் அடங்கியுள்ளனர். யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.

இன்று கையொப்பமிட்டுள்ள திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணம், திருமதி மேரிகமலா குணசீலன் ஆகிய இரு பெண் வேட்பாளர்களுக்கும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் சக ஆண் வேட்பாளர்களும் தமது வாழ்த்துகளையும், ஆசிகளையும் வழங்கியுள்ளனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பானது வேட்பாளர்கள் தெரிவில் மிகக்குறைந்தளவு பிரதிநிதித்துவத்தை பெண்களுக்கு கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் யாழ்.வேட்பாளர் விபரம்

எழிலனின் மனைவியும் போட்டி!

Recommended For You

About the Author: Editor