“கூகுள் சிறுவன்” விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு இணையான IQ வில் அசத்தும் ஆறு வயது இந்திய சிறுவன்

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனுக்கு சமமாக 150 அறிவுத் திறன் புள்ளிகளை கொண்டு இந்தியாவின் ஹரியானாவில் உள்ள 6 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். இந்த சிறுவனின் அறிவுத்திறனும் செய்திகளை உள்வாங்கும் தன்மையும் அதை விரைவில் வெளிப்படுத்தும் சக்தியும் அறிஞர்களை வியக்க வைக்கிறது.

google-boy

கேள்விகளுக்கு சில நொடிகளில் பதிலளிக்கும் இந்த சிறுவனின் திறனைக் கண்டு “கூகுள் சிறுவன்” என்று பெயர் பெற்றுள்ளான்.

ஹரியானவின் கர்னல் மாவட்டத்தின் குஹந்த் என்ற கிராமத்தில் 2007 டிசம்பர் 24ல் பிறந்த “கெளடில்யா” என்ற இந்த சிறுவன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள், விண்வெளி, புவியியல் எல்லைகள், இயற்கை வளங்களை போன்றவை தொடர்பான பொது அறிவு கேள்விகளுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் கூறுகிறான். இவனை ஒத்த வயதை உடைய சிறுவர்கள் இன்னும் கூட்டிப் படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இளம் வயதில், உலகம் முழுவதும் உள்ள 213 நாடுகளை பற்றிய அனைத்து தகவல்களையும் கற்று கொண்டு ஒரு கலைக்களஞ்சியமாக திகழ்கிறான் . சர்வதேச உளவியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்த இவனுடைய கற்றல் திறன்களை , நினைவுத் திறனை அறிஞர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிரபலமான குருஷேத்ரா பல்கலைக்கழகத்தின் உளவியல் அறிஞர்கள், கெளடில்யாவின் அறிவுத் திறனை ஆராய்ச்சி செய்து அவனை ஒரு ‘ குழந்தைமேதை.’ என்று கூறியுள்ளார்கள்.

கெளடில்யாவின் நண்பர், மற்றும் வழிகாட்டி என கூறி கொள்ளும் அவனுடைய தாத்தா ஜெய்கிஷன் சர்மா ஒரு நிகழ்வை குறிப்பிடுகையில் ” கெளடில்யா உண்மையில் புகைப்படம் எடுப்பது போல நினைவாற்றல் உள்ள ஒரு அதிசயப் பிறவி. இந்த சிறுவன் எந்த கேள்வி கேட்டாலும் மிக எளிதாக பதில் தருகிறான் . இத்தகைய திறனை இவனை ஒத்த வயதினர் பெறுவது மிகவும் அரிதான ஒன்றாகும். சென்ற வருடம் பிப்ரவரியில் ஆக்ராவிற்கு குடும்பம் பயணம் சென்ற போது இவன் அங்கிருந்த விளம்பர பலகைகளை மனனம் செய்து திரும்ப கூறிக்கொண்டு இருந்தான் அப்பொழுதுதான் நாங்கள் அவனின் திறனை முதன் முறையாக அறிந்தோம். என்று கூறினார்.

கெளடில்யாவிற்கு இப்போது அட்லசில் உள்ள அனைத்து விபரங்களும் முழு நினைவில் உள்ளது. அட்லசில் உள்ள நாடுகள் அதன் தலைநகர்கள் , எல்லைகள் உற்பத்தி திறன் (GDP) , தனிநபர் வருமானம், , விண்வெளி, சர்வதேச அரசியல், மற்றும் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் எந்த வரிசையில் கேட்டாலும் பதில் கூறுகிறான்.

kidwithfathermother

கெளடில்யாவின் தந்தை சதீஸ் சர்மா நடத்தும் பள்ளியில் தற்பொழுது முதல் வகுப்பு படிக்கிறான். தனது தாய் சமைக்கும் உணவை விரும்பி சாப்பிடுகிறான் ஆரம்பத்தில் நடனத்திலும் யோகாவிலும் ஆர்வம் கொண்டிருந்தவன் சில மாதங்களில் அதில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது.

“அறிவுக் களஞ்சியம்” .என்று அழைக்கப்படும் கெளடில்யாவிற்கு கணிதமும் அறிவியலும் விருப்பமான பாடமாகும், தனது தாத்தாவிடம் எப்பொழுதும் கேள்வி கேட்கும் கெளடில்யா கேள்விக்கு பதில் வரும்வரை தூங்க மாட்டான். சிறந்த பேச்சாற்றல் கொண்ட இவனுக்கு அதிக நண்பர்கள் இல்லை , தாத்தாவும் புத்தகமும் தான் இணைபிரியாத துணைகள். கெளடில்யாவின் முக்கிய பொழுது போக்கு அட்லைசை ஆராய்வது தான் இவனின் தாய் தந்தை இருவரும் ஆசிரியர்கள் மேலும் இவனுக்கு 7 & 9 வயதில் இரு சகோதரிகளும் இருக்கிறார்கள்.

boy-abithap

கெளடில்யா, புராதன காலத்து சாணக்கியனை தனது குருவாக நினைக்கிறான் . சாணக்கியனை போலவே சிறிதாக குடுமியும் வைத்துள்ளான். இவனின் திறனை அறிந்த அமிதாப் பச்சன் தான் நடத்தும் “கோன் பனேங்க கரோர்பதி” நிகழ்ச்சிக்கு வரவழைத்து சிறப்பித்தார். அதில் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விரைவாக பதிலளித்தான்.