குழந்தையுடன் பிச்சையெடுத்த பெண் கைது

arrest_1யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பிச்சையெடுத்த தாயொருவர், யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கடந்த நில நாட்களாகவே பிச்சையெடுத்து வந்த நிலையிலேயே அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மற்றும் பிள்ளை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் பொலிஸ் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகளை அடுத்து அவர்களை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.