குறிகாட்டுவான் பஸ்ஸில் தொற்றாளர்கள் பயணம்! – கூடப் பயணித்தோருக்கு முக்கிய அறிவிப்பு!!

கொழும்பில் இருந்து இருந்து வந்த கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவானுக்குச் சென்ற பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

அந்த பஸ்ஸில் பயணித்த ஏனையவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து புறப்பட்ட தொற்றார்கள், மறுநாள் அதிகாலை 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரை அடைந்துள்ளனர்.

அங்கிருந்து இருவர் காலை 6.50 மணிக்குக் குறிகாட்டுவான் நோக்கிப் பயணித்த NA 9167 DILA என்ற தனியார் பயணிகள் பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

அந்த பஸ்ஸில் பயணித்த ஏனையவர்கள் உடனடியாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 24 மணி நேர அவசர அழைப்பு இலக்கமான 021 222 6666 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் அச்சமின்றி, சமூகப் பொறுப்புடன் தகவல்களை வழங்க வேண்டும் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor