குடியிருப்பு முகாமில் இருந்து இராணுவத்தினர் வௌியேற்றம்

வவுனியா – குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்திற்கு சொந்தமான இராணுவ முகாமில் அமைந்துள்ள கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வௌியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி அந்த கட்டத்தை மீள வவுனியா மாவட்ட செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம் மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் குறித்த கட்டடம் இராணுவ முகாமுக்காக கையளிக்கப்பட்டதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த கட்டடத்தை மீள பெற்றுத் தருமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts