எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற குடிநீர் போத்தல்களை பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச் செல்லுதல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஜுன் மாதம் 11 ஆம் திகதி வெளியயிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அந்த சட்ட நடைமுறைகள் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலாகும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அன்றைய தினத்திலிருந்து இந்த சட்டங்களை மீறும் நிறுவனங்கள் அல்லது நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.