கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு!

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி,சிங்கள இலக்கியத்தில் வரும் “குருந்தி” என்ற இடமே இதுவாக இருக்கலாம் என பேராசிரியரால் கூறப்பட்டது “சாவகனுக்கும்” இவ்விடத்திற்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டுள்ளது

சுதை மற்றும் செங்கற்களால் ஆன இவ்வாலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம், பலிபீடம் ஆகியனவும் சுவர்களில் தூண்களும் காணப்படுகின்றது.

இதே வேளை இந்த ஆலயம் குறித்த ஆய்வினை 2017 ம் ஆண்டு கலைப்பீட இறுதியாண்டு மாணவன்(நகுலேஸ்வரன் தார்மீகன்)  தனது ஆய்வுக்கட்டுரையில் ஆய்வு செய்து வரலாற்றுத்துறைக்கு சமர்ப்பித்திருந்தார்  . அதன் தொடர்சியாக செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே மேலதிக ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரியவருகின்றது

Recommended For You

About the Author: webadmin