கிளைமாக்ஸ் தான் உத்தமவில்லனின் ஹைலைட்டே!

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், தனது விஸ்வரூபம்-2 பணிகளை தொடங்கினார். அந்தப்படமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வந்தநிலையில் தனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் கமல்.

uttama-villain-movie-posters-1

இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று இப்படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது. கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, பார்வதி நாயர், ஊர்வசி, ஜெயராம், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மற்றும் கே.விஸ்வநாத் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள்.

ஜிப்ரான் இசையமைக்க, கமல் மற்றும் லிங்குசாமி இருவரும் படத்தை தயாரிக்கின்றனர். தற்போது இந்தப்படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் ரமேஷ் அரவிந்த் அளித்த பேட்டி ஒன்றில், உத்தமவில்லன் பற்றிய ஹைலைட்டான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் உத்தமவில்லன் படத்தில் வரும் 10 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள், கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஒரு புதிய உணர்வை கொடுக்கும். இந்தப்படத்தில் கமல் தனது நடிப்பை ஒரு புதிய கோணத்தில் கொண்டு போய் உள்ளார் என்று கூறியுள்ளார்.