கிளி.கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட நகர வீதிகளில் ஒளிர்ந்த மின்விளக்குகள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட நகர வீதிகளில் மின்விளக்குகள் நேற்று முதல் ஒளிர்ந்தன. கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபைக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை காலமும் மின்னிணைப்பில்லாமல் மின்
விளக்குகள் ஒளிராத நிலையில் நேற்றைய தினம் இரவு 7மணியளவில் திடிரென மின்விளக்குகள் ஒளிரப்பட்டன.

நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த கிளிநொச்சி கரைச்சி பிதேச சபைக்குட்பட்ட
பிரதேசங்களில் மின்விளக்குகள் ஒளிரப்பட வேண்டும் என்று தெரிவித்ததையடுத்து அந்தப் பிரதேசங்களில் உடனே
மின்படலம் மூலம் மின்னிணைப்பு வழங்கப்பட்டு மின்விளக்குகள் ஒளிரப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.