கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி

கிளிநொச்சி-யாழ்ப்பாணம் வீதியில் ஆனையிறவு தட்டுவாங்கொட்டி பிரதேத்தில், திங்கட்கிழமை மாலை 6:40க்கு இடம்பெற்ற விபத்தில், இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

ஆனையிறவு, தட்டுவாங்கொட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கராசா செந்தில்நாதன் (வயது 28), யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நல்லத்தம்பி துஷாந்தன் (வயது 36) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts