கிளிநொச்சியில் விபத்து, ஸ்தலத்திலேயே இளைஞர் சாவு

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளார்.

நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் தர்மபுரத்தைச் சேர்ந்த வி. ஜதார்த்தன் (வயது – 24) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.