கிளிநொச்சியில் ஏ9 வீதியில் நடந்த கோர விபத்தில் பலா் படுகாயம்

கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் வாகனம் குடை சாய்ந்து மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகனங்கள் ஒன்றையொன்று விலத்திச் செல்ல முற்பட்ட சமயம் இந்த பாரிய விபத்து ஏற்பட்டது.

வீதியோரத்தில் கடைகளில் மக்கள், பாதசாரிகள் நின்றிருந்த வேளை விபத்துக்குள்ளான வாகனம் கடையொன்றுடன் மோதிச் சரிந்தது.

கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்திக்கும் கந்தசாமி கோவிலுக்குமிடையில் கடந்த ஓரிரண்டு மாதங்களுக்குள் மூன்று பாரிய விபத்துக்கள் இடம்பெற்றதுடன் வாகனங்கள் குடைசாய்ந்து வீதிகளில் சின்னாபின்னமானமை குறிப்பிடத்தக்கது.

kilinochchi-1

kilinochchi-3

kilinochchi-5

Recommended For You

About the Author: Editor