கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி! மனமுடைந்த இரு இளைஞர்கள் தற்கொலை!

ஹட்டன் மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களில் நேற்று இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் இறுதி போட்டியை பார்த்த பின்னரே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட பொழுதிலும், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

ஹட்டன் குடாஓயா பிரதேசத்தில் 22 வயது தமிழ் இளைஞன் ஒருவர் நேற்றிரவு கிரிக்கட் போட்டியை பார்த்துவிட்டு வீடுதிரும்பிய நிலையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் அதிக மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும், மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார்; தெரிவிக்கின்றனர்.

ஹங்வெல்ல – நிரிபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று அதிகாலை குறித்த இளைஞன் தமது வீட்டின் அருகில் இருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவில் வீடு திரும்பிய தமது புதல்வர் காலை வேளையில் வீட்டில் இல்லாமை குறித்து அவரின் தாயார் தேடியுள்ளார்.

நேற்றிரவு குறித்த இளைஞர் அயலவர் வீட்டில் கிரிக்கட் போட்டியை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார்.

தமது புதல்வர் இரவு உணவை உட்கொண்டு விட்டு நித்திரைக்குச் சென்றதாக தாயார் தெரிவித்தார்.

இருந்த போதும், காதல் தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலையே மரணத்திற்கு காரணம் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webadmin