Ad Widget

காணாமல் போனோரில் 48 பேருக்கு மட்டுமே இறப்புச் சான்றிதழ்

வட மாகாணத்தைச் சேர்ந்த காணாமற்போனோரில் 48 பேரின் இறப்புக்கள் மட்டும் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் நாயக அலுவலகத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருதி பதியுமாறும் அதன் மூலம் பெறப்படும் இறப்பு சான்றிதழை ஆவணமாக சமர்ப்பித்து போரில் இறந்தவர்களுக்கான நட்டஈட்டுத் தொகை மற்றும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ளுமாறும் அரச தரப்பினாலும் காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைக் குழுவினாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் வட மாகாண உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகத் தகவல்களின் படி, கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையுள்ள காலப்பகுதியில் 48பேர் காணாமற்போனோரின் இறப்பு என்ற வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காணாமற்போனோரின் இறப்பு என்ற வகையில் வட மாகாணத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறு பேரும், பெப்ரவரி மாதம் இருவரும், மார்ச் மாதம் மூவரும், ஏப்ரல் மாதம் அறுவரும், மே மாதம் ஐவரும், ஜூன் மாதம் ஐவரும், ஜுலை மாதம் ஐவரும், ஒக்டோபர் மாதம் நால்வரும், நவம்பர் மாதம் எட்டுப் பேரும், டிசம்பர் மாதம் நால்வரும், என மொத்தமாக 48 பேரின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த அலுவலக தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts