காணாமற்போன கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!!

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் நேற்று நவாலியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது-51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடக்கம் அவரைக் காணவில்லை என குடும்பத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.

இரண்டு நாள்களின் பின்னர் அவர் நவாலிப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கவுள்ளது.

Recommended For You

About the Author: Editor