காணாமற்போனோர் தொடர்பான சுயாதீன பணியகம் அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றின் மூலம், காணாமற்போனோர் தொடர்பான சுயாதீன பணியகம் ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்தநிலையிலேயே அரசாங்கம் காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்றி குறித்த பணியகத்தை அமைக்கவுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சுமத்தியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான இயக்குனர் பிரட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு விசேட கட்டமைப்பு ஒன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.