கஸ்தூரியார் வீதியில் உள்ள கடைகளை 33 அடிகளுக்கு அப்பால் கட்டுங்கள்; முதல்வர் அறிவிப்பு

கஸ்தூரியார் வீதியின் இரு மருங்கிலும் உள்ள கடைகள் வீதியின் மையத்தில் இருந்து 33 அடிகளுக்கு அப்பால் கட்டப்பட வேண்டும் என்ற நடைமுறை விரைவில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் விசேட கூட்டம் நேற்று சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன்போதே முதல்வர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஸ்தூரியார் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி அபிவிருத்தி மற்றும் வாகன தரிப்பிடம் என்பன அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியானது மிகுந்த வாகன நெரிசல் கொண்டதாகும். எனவே வீதிக்கு அருகில் கடைகள் கட்டப்பட்டு இருப்பதால் போக்குவரத்து செய்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே தற்போதுள்ள கடைகளில் சில வீதியின் மையத்தில் இருந்து 33 அடி பின்தள்ளியே கட்டப்பட்டுள்ளது.

மேலும் பல கடைகள் அளவு மீறி கட்டப்பட்டுள்ளன. அவற்றை குறித்த எல்லைக்கு அப்பால் கட்டுமாறு குறித்த பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கவுள்ளோம் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor