கல்வி நிர்வாக சேவை நியமனங்களில் முறைகேடு?

இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என வடமாகாண முதலமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு நியமனங்கள் மற்றும் சேவை நிலையங்கள் வழங்கும் போது பரீட்சையில் பெற்ற புள்ளி ஒழுங்கில் தெரிவு வழங்கப்படல் வேண்டும் என்பது நடைமுறை விதி கோவை இல 81, 130 இல் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு முன்னைய சேவையின் பணியிடம் மற்றும் சேவைக்காலம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அவற்றையும் கருத்தில் எடுக்காது விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

வடமாகாண கல்வி அமைச்சர், செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர் முறையற்ற வகையில் தமக்குச் சார்பானவர்களுக்கு பொருத்தமாக நியமனங்களை வழங்கி அலுவலர்களது திறமையையும் சேவை ஈடுபாட்டையும் கேள்விக் குறியாக்கியுள்ளனர்.

எனவே முதலமைச்சர் நீதியான விசாரணைக் குழுவை நியமித்து நியாயத்தை பெற்றுக்கொடுப்பதன் மூலம் வடமாகாண கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

Related Posts