பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தன்படி யாழ்.பல்கலைக்கழகத்திற்கான நீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்திற்கான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகமும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்விசார ஊழியர்கள் நாடுதழுவிய ரீதீயிலான போராட்டத்தினை கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பித்தனர். நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.