கல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

arrestகல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் முச்சக்கரவண்டியில் நடமாடிய இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 11 மணியளவில் கைது செய்ததாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியங்காடு, கோண்டாவில் ஆகிய இரு இடங்களினையும் சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்ட பொலிஸார், மேற்படி சந்தேகநபர்களை சோதனை செய்த போது, இருவரும் தங்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தத் தவறியிருந்தனர்.

இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டதுடன் முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.