கல்வியங்காட்டில் வாள் வெட்டு, இருவர் படுகாயம்

கல்வியங்காட்டு சந்தியில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்வியங்காட்டுச் சந்தியில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் பணியாளர் இருவருமே வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களாவர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர்களை வாளால் வெட்டி விட்டு பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.

கூக்குரல் இட்டதையடுத்து அப்பகுதிக்கு வந்தவர்களினால் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முன்னர் இரண்டு தடவையும் குறித்த முகாமையாளரிடம் பணம் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.