Ad Widget

கனடா உயர்ஸ்தானிகர் – யாழ் .அரசாங்க அதிபர் சந்திப்பு

வலி.வடக்கில் விரைவில் மீள்குடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கனடா உயர்ஸ்தானிகருக்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

vetha-canada

கனடா உயர்ஸ்தானிகர் வைட்டிங் யாழிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது ,யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அந்தச் சந்திப்பின் போதே, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு கனடா உயர்ஸ்தானிகருக்கு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதையிட்டு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், யாழ். மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமைகள் குறித்தும் தெரிவித்தார்.

அதன்போது கடந்த மார்ச் மாதம் 1000 ஏக்கர் காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.அதேவேளை, விரைவில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

அத்துடன் இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளையும் கனடா உயர்ஸ்தானிகருக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துரைத்தார்.

Related Posts