முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளிப்பதற்கு வருமாறு இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இளைப்பாரிய பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.ஆர். ஜயவர்த்தன, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சரத் லூகொட ஆகியோர் மார்ச் 31ஆம் திகதியன்று சாட்சியமளிக்க வருமாறு நீதிமன்றம் அழைத்துள்ளது.
இந்த இருவரும் முன்னர் சாட்சியமளித்தாலும் அப்போது அவர்களை விசாரித்த நீதிபதி தீபலி விஜேசுந்தர பதவி உயர்வு பெற்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதால், இவர்கள் தற்போதைய நீதிபதி தென்னகோன் முன்னிலையில் மீண்டும் சாட்சியமளிக்க வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.