கடும் எதிர்ப்பால் கொழும்பு திரும்புகின்றனர் சனல் 4 ஊடகவியலாளர்கள்!

கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்துக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மக்ரே தனது ருவிட்டரில் தாம் விருப்பமின்றியே கொழும்புக்கு செல்வதாக தெரிவித்திருக்கின்றார்

கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சனல் 4 ஊடகவியலாளர்கள் பயணித்த ரயிலை வழிமறித்த சிலர் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அதிக நேரம் ரயிலின் உள்ளேயே இருந்த சனல் 4 ஊடகவியலாளர்கள் பின்னர் கொழும்பு நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.