யாழ். ஊடகவியலாளர்கள் – யாழ் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் இடையேயான வாராந்தக் கலந்துரையாடலுக்காக ஊடகவியலாளர்கள் பொலிசாரினால் அழைக்கப்பட்ட போதிலும் கடந்த வாரத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பிலோ பொலிஸாரின் விசேட செயற்றிட்டங்கள் தொடர்பிலோ எந்தவொரு தகவலும் வழங்காது ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் நேற்று இடம்பெற்றது.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக யாழ். ஊடகவிலாளர்களுக்கும் யாழ். பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் வாராந்தம் சந்திப்பு இடம்பெறுவதும் முக்கிய விடயங்கள் சம்பந்தமான செய்திகள் பொலிசாரினால் ஊடகவிலாளர்களுக்கு வழங்கப்படுவது வழமை.
இந்தநிலையில் கடந்த மாதம் முதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பை தவிர்த்துக் கொண்டதுடன், யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி வந்தார்.
எனினும் அவரும் கடந்த வாரங்களில் ஊடகவியலாளர்களது கேள்விகள் சிலவற்றிற்கு பதிலளிக்க முடியாது கலந்துரையாடல்களை பாதியில் முடித்துக் கொண்டு சென்றிருந்தார்.
அதேபோலவே இந்த வாரத்திற்கான சந்திப்பு நேற்று பகல் 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.மகிந்த எக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
வழமை போன்று இல்லாது நேற்று ஊடகவியலாளாகளிடம் ஊர் பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்டு விட்டு வழமையான தகவல்கள் வழங்காது கலந்துரையாடலை முடித்துக் கொண்டனர்.
இதனால ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்